தற்போதைய செய்திகள்

காவிரி விவகாரத்தில் 22-ம் தேதி முதல்வர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம்
  • 19th February 2018

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது.
 
தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. இதனை அடுத்து, 
 
இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மு.க ஸ்டாலின் உள்ளிட்ட பல கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியிருந்தார். மேலும், ஸ்டாலின் தலைமையில் 23-ம் தேதி அண்ணா அறிவாலையத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் உள்ள சாதக, பாதகங்கள் குறித்து சட்ட நிபுணர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசணை நடத்தினார்.
 
இந்த ஆலோசணை கூட்டத்தில் 22-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காலை 1.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
 
இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

comments powered by Disqus