தற்போதைய செய்திகள்
எதியோப்பியா நாட்டுக்கான பயண எச்சரிககையினை கனடா வெளியிட்டுள்ளது. எதியோப்பியாவில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு அவசரகால நிலையினை அந்த நாட்டின் அமைச்சர்கள் அவை அறிவித்துள்ளது.
எதியோப்பியாவில் நாடு தழுவிய அளவிலான பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சத்தினாலேயே இந்த அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே எதியோப்பியாவுக்கு பயணங்களை மேற்கொள்ள இருக்கும் மற்றும் எதியோப்பியாவில் உள்ள கனடியர்களின் பாதுகாப்புத் தொடர்பில் கனடிய மத்திய அரசாங்கம் எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளது.
கனடிய அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்காக வெளியிட்டுள்ள பயண எச்சரிக்கையில், எதியோப்பிய அரசு நேற்று 16ஆம் திகதி அவசரகால நிலையினை அறிவித்துள்ளதாகவும், மக்கள் ஒன்று கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதனால் ஊரடங்குச் சட்டமும் நடைமுறைப்படுத்தப்படக்கூடும் என்றும், அத்துடன் அங்குள்ள தொலைதொடர்பு சேவைகளும் பாதிப்புக்களை அல்லது துணடிப்புக்களை எதிர்நோக்கலாம் எனவும், எனவே அங்குள்ள கனடியர்கள் உள்ளூர் ஊடக தகவல்களை கவனமாக அவதானித்து, அங்குள்ள அதிகாரிகள் பிறப்பிக்கும் அறிவுறுத்தல்களை பின்பற்றுமாறும் கனடியர்களுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.