தற்போதைய செய்திகள்

லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் நடந்த விபத்தில் இருவர் படுகாயம்
  • 13th February 2018

ரொரன்ரோவின் லிட்டில் போர்த்துக்கல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இன்று அதிகாலை 3 மணியளவில் டண்டாஸ் வீதிக்கு அருகே, Dufferin street மற்றும் Bank street பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அந்த இருவரும் உடனடியாகவே மருத்துமனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் படுகாயத்திற்கு உள்ளான நிலையில் உயிராபத்தான நிலையில் இருந்ததாகவும், அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொணடு செல்லப்பட்டுள்ளார் என்றும் அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு நபரும் பாரதூரமான காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் இரண்டு வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், அவை ஒன்றுடன் ஒன்று மோதுண்டதில் இந்த விபத்துச் சம்பவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

comments powered by Disqus