தற்போதைய செய்திகள்

தாஜ்மஹாலை சுற்றிப்பார்க்க நுழைவுக் கட்டணம் உயர்கிறது
  • 13th February 2018

உலக அதிசயங்களில் ஒன்றாகவும் காதல் சின்னமாகவும் விளங்கும் தாஜ்மஹால் ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. மொகலாயர் காலத்து கட்டுமானங்களுடன், பிரமிக்க வைக்கும் அழகில் இருப்பதால், உள்நாடுகளில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்தும் அதிகமான சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
 
இந்நிலையில், தற்போது தாஜ்மாஹாலை சுற்றிப்பார்க்க உள்நாட்டவர்களுக்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இது மூன்று மணி நேரத்திற்கு மட்டுமே. இதற்கென வெவ்வேறு நிறங்களில் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. தற்போது, வரை உள்பகுதியில் உள்ள மும்தாஜ் கல்லைறைக்கு சென்று பார்வையிட கட்டணம் ஏதும் கிடையாது.
 
இந்நிலையில், வரும் ஏப்ரல் மாதம் முதல் வெளியே சுற்றிப்பார்க்க மூன்று மணி நேரத்திற்கு ரூ.50 எனவும், உள்பகுதிக்கு சென்று பார்க்க கூடுதலாக 200 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு வெளிநாட்டவர்களுக்கு பொருந்தாது. ஏனென்றால், அவர்களுக்கு ஏற்கனவே அதிகமான தொகையே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

comments powered by Disqus