தற்போதைய செய்திகள்

புதிய அரசாங்கம் தொடர்பில் இதுவரை யாரும் பேசவில்லை – சம்பந்தன்
  • 13th February 2018

புதிய அரசாங்கம் ஒன்று அமைப்பது தொடர்பில் எந்தவொரு கட்சிகளும் இதுவரை தமது கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

புதிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமா என்பது தொடர்பில், அத தெரண வினவியதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அது சம்பந்தமாக பேசுவதற்குறிய எவ்வித தேவையும் தமது கட்சிக்கு இல்லை என்று அவர் இதன்போது அத தெரணவிடம் கூறினார்.

தற்போதைய அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு மதிப்பளிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு கட்சியினதும் பிரதிநிதிகளும் தம்முடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும் இதனால் அது குறித்த தீர்மானம் எடுக்கும் தேவையொன்று எழவில்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

comments powered by Disqus