தற்போதைய செய்திகள்

ஒன்ராறியோவின் முன்னாள் சபாநாயகர் கிறிஸ் ஸ்ரொக்வெல் மறைவு
  • 12th February 2018

ஒன்ராறியோவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், சபாநாயகராகவும், பழமைவாதக் கட்சியின் நீண்டகால உறுப்பினராகவும் இருந்த கிறிஸ் ஸ்ரொக்வெல் உயிரிழந்துள்ளார்.

அறுபது வயதுகளின் ஆரம்பத்தில் உள்ள அவர், புற்றுநோய்க்கு எதிராக போராடி வந்த நிலையில் நேற்று உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈட்டோபிக்கோவைப் பிரதிநிதித்துவப்படுத்தி 13 ஆண்டுகளாக ஒன்ராறியோ சட்டமன்றில் உறுப்பினராக இருந்த அவர், முற்போக்கு பழமைவாதக் கட்சியின் ஆட்சியின் போது பல்வேறு அமைச்சரவைப் பதவிகளையும் வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ் ஸ்ரொக்வெல்சின் மறைவு குறித்து பழமைவாதக் கட்சியினர் மட்டுமின்றி, முன்னாள் தலைவர்கள், ஏனைய கட்சி உறுப்பினர்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் தமது இரங்கலை வெளியிட்டு வருகின்றனர்.

comments powered by Disqus