தற்போதைய செய்திகள்

பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்கு இனி கஸ்தூரி வழங்க இயலாது - நேபாள மன்னர் பேட்டி
  • 10th February 2018

ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோவில் மிகவும் பிரபலமானது. இந்த கோவிலில் உள்ள ஜெகன்நாதர் சிலைக்கு ஆண்டின் மிக முக்கியமான மூன்று நாட்களில் வாசனைப்பொருளான கஸ்தூரி பூசப்படும். இந்த கஸ்தூரியாது, கஸ்தூரி மான் வயிற்றிலிருந்து கிடைக்கிறது.

பூரி ஜெகன்நாதரின் தீவிர பக்தரான நேபாள மன்னர் ஞானேந்திரா பிர் பிக்ரம் ஷா தேவ், கஸ்தூரியை ஆண்டு தோறும் நேபாள நாட்டின் சார்பாக பூரி ஜெகன்நாதர் கோவிலுக்கு வழங்கி வந்தார். ஆனால் அந்நாட்டில் கஸ்தூரி மான் வேட்டையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கஸ்தூரியை எடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இதற்கிடையில், நேபாள நாட்டின் கடைசி மன்னர் ஞானேந்திரா பிர் பிக்ரம் ஷா தேவ், 6 நாள் சுற்றுப்பயணமாக ஒடிசா வந்துள்ளார். சங்கராச்சாரியார் சுவாமி நிஸ்சலானந்த சரஸ்வதியின் பட்டாபிஷேக வெள்ளிவிழா நிகழ்ச்சியில் நேபாள மன்னர் ஞானேந்திரா பிர் பிக்ரம் ஷா தேவ் நேற்று கலந்து கொண்டார். அப்போது அளித்த பேட்டியில், 'நேபாளத்தில் கஸ்தூரி மானை வேட்டையாட தடை விதிக்கப்பட்டதால் மானிலிருந்து பெறப்படும் வாசனைப்பொருள் கஸ்தூரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பூரி ஜெகன்நாதர் ஆலயத்திற்கு வழங்கப்பட்டு வரும் கஸ்தூரியை இனி அளிக்க இயலாது' என கூறினார். 

comments powered by Disqus