தற்போதைய செய்திகள்

மாட்டு வண்டியில் சென்று வாக்களித்த மக்கள்
  • 10th February 2018

இன்று நடைபெற்ற உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி, புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் சிலர் இன்று மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகியும் தங்களின் உள்ளுர் வீதிகள் அனைத்தும் மாட்டு வண்டிகள் மட்டுமே பயணிக்கக் கூடிய நிலையில் இருப்பதால் தாங்கள் இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வாறு தாம் மாட்டு வண்டியில் சென்று வாக்குகளை பதிவு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

comments powered by Disqus