தற்போதைய செய்திகள்

வட அமெரிக்காவின் வர்த்தக உடன்படிக்கையை மீளமைப்பதில் நம்பிக்கை - டேவிட் மக்னோடன்
  • 10th February 2018

நஃப்டா (NAFTA) உடன்பாடு தொடர்பில் வட அமெரிக்கா தடையற்ற வர்த்தக உடன்படிக்கையை மீள் அமைப்பதில் காணப்பட்ட பெரும்பகுதி வேலைத்திட்டங்களில் போதிய அளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக்னோடன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மிகக் குறைந்த அளவில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்களிலும் பாரிய முன்னேற்றங்கள் காணப்பட்டுவதாகவும், அந்த வகையில் இந்த உடன்பாட்டின் வெற்றியைக் காண்பதற்குத் தாம் மிகுந்த ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் இந்த உடன்பாடு தொடர்பிலான பேச்சுக்களில் ஈடுபடுவோர், எதிர்வரும் மார்ச் மாதத்தின் இறுதியில் கொள்கையளவில் இணக்கப்பாட்டிற்கு வருவார்கள் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த உடன்பாட்டில் தொடர்புபட்டுள்ள மூன்று நாடுகளும் பல்வேறு விடயங்களில், பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் கண்டுள்ளதாகவும் டேவிட் மக்னோடன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

comments powered by Disqus