தற்போதைய செய்திகள்

இந்தி நடிகையால் ஓரம் கட்டப்பட்ட அனு இமானுவேல்
  • 13th January 2018

‘எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘மெஷின்’ உள்ளிட்ட இந்தி படங்களில் நடித்தவர் கியாரா அத்வானி. இவர், தெலுங்கில் கொரட்டல்லா, சிவா இயக்கத்தில் மகேஷ்பாபுவுடன் ‘பாரத்அனே நேனு’ படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இதை தொடர்ந்து தெலுங்கில் முக்கிய இடம் பிடிக்கும் முயற்சியில் இறங்கினார். இதற்கு இப்போது பலன் கிடைத்திருக்கிறது. ராம்சரண் நடிக்கும் புதிய படத்தில் கியாராவுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. போயாபதி ஸ்ரீனு இயக்கும் இந்த படத்தில் அனுஇமானுவேல் தான் முதன்மை நாயகியாக நடிப்பதாக இருந்தது.

ஆனால் மகேஷ்பாபு படத்தில் கியாரா அத்வானி நடித்து வருவதால் ராம்சரண் படத்தில் அவரை முதன்மை நாயகியாக்கி உள்ளனர். அனு இமானுவேலை இரண்டாவது நாயகியாக்கி விட்டனர். இதனால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

comments powered by Disqus