தற்போதைய செய்திகள்

தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோக நடவடிக்கை தொடக்கம்
  • 13th January 2018

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான அனைத்து தபால்மூல வாக்காளர் அட்டைகளும் இன்று விநியோகிக்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா மாவட்டங்களுக்கான, எஞ்சியுள்ள வாக்காளர் அட்டைகளும், மற்றும் ஏனைய பிரதேசங்களுக்கான தபால்மூல வாக்காளர் அட்டைகளும் விநியோகிக்கப்படுவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார்.

இதேவேளை நாட்டின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் மேற்படி தபால் மூல வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

comments powered by Disqus