தற்போதைய செய்திகள்

ஆதார் அடையாள அட்டையின் தகவல்களை பாதுகாக்க புதிய 16 இலக்க எண்
  • 11th January 2018

ஆதார் அடையாள அட்டையின் தகவல்கள் சட்ட விரோதமாக வெளியிடப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து ஆதார் தகவல்களை பாதுகாக்க ஆதார் சேவை வழங்கும் உதாய் அமைப்பு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அனைவரும் ஆதார் எண்ணிற்கு பதிலாக அரசு வழங்கும் புதிய 16 இலக்க எண்ணை பயன்படுத்த வேண்டும். அதன் படி ஆதார் எண் கொண்ட அனைவருக்கும் இணையதளம் மூலம் புதிய 16 இலக்க எண் தரப்படும். இதன் மூலம் அந்தந்த நிறுவனங்களுக்கு தேவையான தகவல்கள் மட்டுமே பரிமாறப்படும்.

அதாவது, ஆதாரில் பெயர், பிறந்த தேதி, போட்டோ, முகவரி மற்றும் செல்போன் எண் ஆகிய 5 தகவல்கள் இருக்கும். இந்த புதிய எண் மூலம் அதிலிருந்து தேவையான தகவல் மட்டுமே எடுக்க முடியும். எடுத்துக்காட்டாக செல்போன் இணைப்பு பெற அந்நிறுவனத்திற்கு பெயர், போட்டோ மற்றும் முகவரி மட்டும் வழங்கப்படும். அதே போல் பாஸ்போர்ட் பெற அனைத்து தகவல்களும் அளிக்கப்படும் என உதாய் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதற்கான ஆன்லைன் பதிவு மார்ச் மாதம் தொடங்கும். ஆதார் எண் கொடுக்க வேண்டிய அனைத்து இடங்களிலும் இந்த எண்ணை கொடுக்கலாம். அந்தந்த துறையினர் தங்களுக்கு தேவையான தகவல்கள் என்ன என்பதை தெரிவித்தால், அதன் படி திட்டம் அமைக்கப்படும். மேலும், இந்த புதிய எண்ணை தேவைப்படும் போது மாற்றிக்கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

comments powered by Disqus