தற்போதைய செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 14-ம் தேதி இந்தியா வருகை
  • 11th January 2018

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு 6 நாள் அரசு முறை பயணமாக வரும் 14-ம் தேதி இந்தியா வர உள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் பிரதமராக உள்ள பெஞ்சமின் நேதன்யாகு வரும் 14-ம் தேதி அரசுமுறைப்பயணமாக இந்தியா வருகை தருகிறார். தனது பயணத்தில் டெல்லி தவிர ஆக்ரா, அகதமாபாத் மற்றும் மும்பை நகரங்களுக்கும் அவர் செல்ல இருக்கிறார். தனது இந்திய பயணத்தில் பிரதமர் மோடி, ஜனாதிபதி கோவிந்த் ஆகியோரை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பில் 1700 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு துறைகளில் ஒப்பந்தகள் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது, சமீபத்தில் ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஐ.நா தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவாக வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus