தற்போதைய செய்திகள்

கனடாவை நோக்கி படையெடுக்கும் எல் சல்வடோர் நாட்டவர்கள்
  • 10th January 2018

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அரசாங்கம், அமெரிக்காவில் வசிக்கும் இரண்டு இலட்சம் எல் சல்வடோர் நாட்டவர்களை வெளியேற்ற முடிவு செய்துள்ள நிலையில், அவர்கள் தற்போது கனடாவை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் கடும் அதிருப்பதியடைந்துள்ள கனேடிய அரசாங்கம், எல்லையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதோடு, அமெரிக்காவிற்கே சென்று, கனடா நோக்கி வரும் மக்களைத் தடுப்பதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.

அமெரிக்காவால் தற்காலிக அடைக்கல அந்தஸ்து இரத்து செய்யப்பட்டவர்களுக்காக சிறப்புத் திட்டங்களை கனடா ஏற்படுத்தியுள்ளதாக தவறான கருத்து பரவியதை அடுத்த இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

புகலிடம் கோரி விண்ணப்பிக்கும் எல் சல்வடோர் நாட்டவர்களின் எண்ணிக்கை கடந்த 2016ஆம் 244 ஆக இருந்தது. ஆனால் 2017ஆம் 564ஆக உயர்ந்துள்ளது.

இதற்கு முன் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஹெய்டி நாட்டவர்கள் கனடாவிற்குப் படையெடுத்ததைத் தொடர்ந்து இப்போது எல் சல்வடோர் நாட்டவர்களும் கனடாவை நோக்கி திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

comments powered by Disqus