தற்போதைய செய்திகள்

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய யூசுப் பதான்
  • 9th January 2018

இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் இர்பான் பதான். இவரது சகோதரர் யூசுப் பதான். 2018-ம் ஆண்டு அறிமுகமான ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையை வாங்க முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய அணியில் அதிக அளவில் இடம்பிடிக்காவிடிலும், ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். பிசிசிஐ நடத்தும் உள்ளூர் தொடர்களில் பரோடா அணிக்காக யூசுப் பதான் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் விளையாடும்போது, இவருக்கு ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது தடைவிதிக்கப்பட்ட ஊக்கமருந்தை உட்கொண்டது தெரியவந்துள்ளது. இதனால் ரஞ்சி டிராபிக்கான பரோடா அணியில் இருந்து யூசுப் பதானை நீக்க பிசிசிஐ வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரஞ்சி டிராபியில் ஒரேயொரு போட்டியில் மட்டுமே யூசுப் பதான் விளையாடினார்.

உடல்நிலை சரியில்லாதபோது மருந்து எடுத்துக் கொண்டார். அப்போது மருத்துவத்திற்காக எடுத்துக் கொள்ளப்பட்ட மருந்து என்பதை நிரூபிக்க யூசுப் பதான் தவறிவிட்டதாக கூறப்படுகிறது. யூசுப் பதான் உடலநிலை சரியில்லாத நேரத்தில் புரோசீட் (Brozeet) என்ற மருந்தை உட்கொண்டுள்ளார். இதில் டெர்ப்யூடாலின் (Terbutaline) என்ற ஊக்கமருந்து சேர்க்கப்பட்டுள்ளது. இது தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தாகும். வீரர்கள் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்கு இதை பயன்படுத்த அனுமதிக் கோரினால் அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

டெர்ப்யூடாலின் மூச்சுவிட சிரமம் ஏற்படும்போது பயன்படுத்தும் மருந்தாகும். கடந்த ஆண்டு கால்பந்து கோல் கீப்பர் சுப்ரதா பால் என்பவரும் இதுபோன்று தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை பயன்படுத்திய விவகாரத்தில் சிக்கினார்.

2013-ம் ஆண்டு டெல்லி அணியின் பிரதீப் சங்வான் என்ற வீரர் ஊக்கமருந்து விவகாரத்தில் 18 மாதங்கள் தடைபெற்றார். யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் மற்றும் 22 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

comments powered by Disqus