தற்போதைய செய்திகள்

சிதம்பர ஆலய வழிபாட்டிற்கான இலவச அனுமதி பற்றுச்சீட்டு
  • 9th January 2018

வடமாகாணத்தில் இருந்து முதல்முறையாக கடல் வழிமார்க்கமாக இந்தியாவில் உள்ள சிதம்பர ஆலயத்தினை வழிபாடுகளை மேற் கொள்ளுவற்காக பக்தர்களின் இலவச அனுமதிக்கான பற்றுச்சீட்டுகளை வழங்கும் சேவைகள் வடமாகாண ஆளுநர் அலுலகத்தினால் முன்னேடுக்கப்பட்டன.

இவ் இலவச அனுமதிகள் இன்றில் இருந்து 13 திகதி வரை முன்னேடுக்கப்படும் என யாழ் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது..

நீண்டகாலமாக இவ் சேவை காணப்படாத நிலையில் இருந்தபோதில் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். என்ற நோக்கில் இவ் சேவை இந்திய துணைத்தூதகரம்,மற்றும் இந்து சமய கலாசார அமைச்சின் உதவியுடன் இவ் சேவைகள் இடம்பெறுகின்றது.

வடமாகாண உள்ள இந்துமக்களின் நலனின் மையப்படுத்தி இவ்வாறான சேவை முன்னேடுக்கப்படுகின்றது.

இதில் இலங்கை நாணய ரூபாவின் படி 5,000 ரூபாவில் இருந்து 10,000 ரூபா வரையான பற்றுச்சீட்டுகளை பெற்று படகு மூலமான சேவையினை மேற்கொள்ளமுடியும்.. அங்கு நிக்கின்ற 04 நாளும் கோயில் நிர்வாகத்தின் உதவியும் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது..

இதில் தேசிய அடையாள அட்டை,கடவுச்சீட்டு,கிராமசேவையாளர்கள் பிரிவு அவசியமாகின்றது என தெரிவிக்கப்படுகின்றது..

இவ் சேவை 15 திகதி வரையில் இருந்து ஆரம்பிக்கப்படும். ஆளுநர் செயலகம் இன்று தெரிவித்துள்ளது..

comments powered by Disqus