தற்போதைய செய்திகள்

கனேடிய பிரதமரின் சீன விஜயம் - மனித உரிமைகள் குறித்து முக்கிய கவனம்
  • 27th November 2017

கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின் சீன விஜயத்தின் போது இரு தரப்பு வர்த்தகம் மற்றும் மனித உரிமைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சீன விஜயம் குறித்த தகவல்களை பிரதமர் அலுவலகம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) உறுதிசெய்தது. அதன்படியே இத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் அலுவலக தகவல்களின்படி, பிரதமர் ட்ரூடோ எதிர்வரும் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதிவரை சீனாவில் தங்கியிருப்பார் என தெரியவந்துள்ளது. மேலும், பிரதமரின் எதிர்வரும் சீன விஜயமானது ஒரு முற்போக்கான வர்த்தக நிகழ்ச்சி நிரலை கொண்டிருப்பதுடன், சுற்றுலா முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் அமையும் என பிரதமர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

comments powered by Disqus