தற்போதைய செய்திகள்

191 பந்தில் முச்சதம் அடித்து தென்ஆப்பிரிக்க வீரர் சாதனை
  • 26th November 2017

தென்ஆப்பிரிக்காவில் மூன்று நாட்கள் கொண்ட முதல்தர உள்ளூர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பார்டர் - ஈஸ்டன் பிரோவின்ஸ் அணிகள் மோதின. இதில் பார்டர் அணிக்காக விளையாடியவர் மார்கோ மரைஸ். இவர் 68 பந்தில் சதம் அடித்தார். தொடர்ந்து விளையாடி 139 பந்தில் இரட்டை சதம் அடித்தார். அத்துடன் நிற்காமல் 191 பந்தில் முச்சதம் அடித்தார்.

இதன்மூலம் விரைவாக முச்சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பார்டர் அணி 84 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 6-வது வீரராக களம் இறங்கிய 24 வயதான மார்கோ, 13 சிக்சர்கள் மற்றும் 35 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.

1921-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் சார்லஸ் மெகார்ட்னெ 221 பந்தில் 300 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அதை மார்கோ முறியடித்துள்ளார்.

comments powered by Disqus