தற்போதைய செய்திகள்

இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகவும் பலம் வாய்ந்தது: பிரதமர் மோடி
  • 26th November 2017

தலைநகர் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய சட்ட தினவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

இந்திய அரசியலமைப்பை உருவாக்கியது எளிதான செயல் அல்ல. சுதந்திர இந்தியாவில் அனைத்து சோதனைகளையும் சவால்களையும் சந்தித்துள்ளது. அரசியலமைப்பு தான் நம்மை ஜனநாயக பாதையில் வைத்துள்ளது. அது அனைவருக்கும் சாத்தியமானது.

இந்திய அரசியலமைப்பு சட்டம் மிகவும் பலம் வாய்ந்ததாக உள்ளது. திறமை வாய்ந்தது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை மேலும் வலுப்படுத்த அனைத்து அமைப்புகளும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும். அரசு, நீதித்துறை, நிர்வாகம் அனைத்தும் ஒரே குடும்பமாக இருக்கிறோம். ஜனநாயகத்தில் இன்று புனித நாள்.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பலப்படுத்த நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுகிறோமா? சுதந்திரம் அடைந்து பல ஆண்டுகளாகியும் நம்முடைய பலவீனங்களை அகற்ற முடியாதது துரதிஷ்டவசமானது. பலவீனங்களை அகற்ற நாம் அனைத்து மட்டங்களிலும் சிந்திக்க வேண்டும்.

புதிய இந்தியாவுக்காக நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து நிற்கிறோம். இதற்காக அனைவரின் பங்களிப்பும் அவசியம். நமக்கு இப்போது அதற்கான காலம் வாய்த்துள்ளது என்று அவர் பேசினார்.

comments powered by Disqus