தற்போதைய செய்திகள்

மட்டக்களப்பின் பல பகுதிகளில் வெள்ளம்
  • 26th November 2017

மட்டக்களப்பில் கடந்த 24 மணித்தியாலமாக பெய்து வரும் தொடர் கன மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழப்பமான வானிலை தென்மேற்கு கடல் பகுதியில் நிலவுவதனால் இன்றும் அதிக மழை பெய்யக்கூடிய சாத்திய கூறுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால், அன்றாட கூலித்தொழில் செய்பவர்கள் பாதிக்கப்படுள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் 30ஆம் திகதி வரையில் மழையுடனான காலநிலை தொடரும் எனவும் மட்டக்களப்பு, திருகோணாமலை, காங்கேசன்துறை, கொழும்பு ஊடாக காலி வரையான கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் அவதானமாக இருக்குமாறு மட்டக்களப்பு வானிலை மண்டல திணைக்களத்தின் சிரேஸ்ட வளிமண்டலவியல் அதிகாரி க.சூரியகுமாரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்

comments powered by Disqus