தற்போதைய செய்திகள்

ஒண்டாரியோ மாணவர்கள் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானம்
  • 17th November 2017


ஒண்டாரியோவில் உயர்கல்வி ஆசிரியர்களால் மேற்கொள்ளப்படும் வேலைநிறுத்தம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் மேற்கொள்ளும் வாக்கெடுப்பு கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பித்துள்ள நிலையில் மாணவர்கள் தரப்பில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது தொடர்பில் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த ஒக்டோபர் 15 முதல் ஒண்டார்யோவின் உயர் கல்லூரியை சேர்ந்த சுமார் 12000 பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கவுன்ஸிலர்களால் மேற்கொள்ளப்படும் வேலை நிறுத்தம் காரணமாக சுமார் அரை மில்லியன் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


ஆசிரியர் சங்கம் மற்றும் கல்லூரி முகாமைத்துவங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை முறிவடைந்த நிலையில் ஒப்பந்தம் தொடர்பில் வாக்கெடுப்பு நடாத்துமாறும் கோரப்பட்டதையடுத்து வாக்கெடுப்பு தற்போது இடம்பெற்றுவருகிறது.


வாக்கெடுப்பு இன்று காலை 10 மணியுடன் நிறைவடையவுள்ளது.

comments powered by Disqus