தற்போதைய செய்திகள்

விளையாட்டு பரிசு மூலம் ரூ. 720 கோடி சம்பாதித்து முதல் இடத்தை பிடித்தார் பெடரர்
  • 17th November 2017

டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் பரிசுத்தொகை மூலம் 720 கோடி ரூபாய் சம்பாதித்து டைகர் உட்ஸ்-ஐ பின்னுக்குத் தள்ளி முதல் இடத்தை பிடித்துள்ளார் ரோஜர் பெடரர். 

சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் பெடரர் டென்னிஸ் விளையாட்டில் ஜாம்பவானாக திகழ்ந்து வருகிறார். டென்னிஸின் உயரிய தொடரான கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை 19 முறை கைப்பற்றிய ஒரே வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

2016-ம் ஆண்டு காயத்தால் அவதிப்பட்ட ரோஜர் பெடரர், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் மற்றும் விம்பிள்டன் பட்டத்தை வென்று அசத்தினார். தற்போது வரை 95 பட்டங்கள் வென்றுள்ள பெடரர், பரிசுத் தொகை மூலம் பலகோடி ரூபாய் சம்பாதித்துள்ளனார். 

உலகில் உள்ள பிரபலங்களின் வருமானம், அவர்களின் சொத்து மதிப்புகளை வெளியிடும் போர்ப்ஸ் பத்திரிகை விளையாட்டில் கிடைக்கும் பரிசுத் தொகை மூலம் அதிகம் சம்பாதித்தவர்கள் பட்டியலை வெளியிட்டது. 

இதுவரை உலகின் பணக்கார விளையாட்டாக கருதப்படும் கோல்ப் விளையாட்டின் மன்னனாக கருதப்பட்ட அமெரிக்காவின் டைகர் வுட்ஸ் முதல் இடத்தில் இருந்தார். தற்போது டைகர் வுட்ஸை பின்னுக்குத் தள்ளி ரோஜர் பெடரர் முதல் இடத்தை பிடித்துள்ளார். 

 

comments powered by Disqus